இனி தப்பு செஞ்சா இதுதான் தண்டனை : ஆசிரியர்களை எச்சரிக்கும் அன்பில் மகேஷ்

Published On:

| By Kavi

Minister Anbil Mahesh warns teachers

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி முழுமையாக ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். Minister Anbil Mahesh warns teachers

தமிழகத்தில் வேலியே பயிரை மேயும் கதையாக பள்ளிகளில் சில வக்கிரபுத்தி கொண்ட ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவர் கர்ப்பமானார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு, அந்த பள்ளியின் தாளாளருடைய கணவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அவரை பிடித்து அடித்து உதைத்து சிறுமியின் பெற்றோர்களும், உறவினர்களும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பள்ளிகளில் மாணவிகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர், ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் மாணவர் மனசு என்னும் பெட்டி வைத்துள்ளோம். இருந்தாலும் மாணவர்களுக்கு ஏற்படும் பய உணர்வு காரணமாக அவர்களுக்கு நடக்கும் சில சம்பவங்களை வெளியில் சொல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.

இதனால் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் 800 மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

அப்படி இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டின் உண்மை தன்மையை விசாரணை செய்து, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

அதையும் தாண்டி அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

இனி இதுபோன்று நடக்காத வண்ணம் இரும்பு கரம் கொண்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார். Minister Anbil Mahesh warns teachers

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share