சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகஷே் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக சாரணர் இயக்கம் தோன்றியது.
ராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கிலாந்தில் ராணுவ வீரரான பேடன் பவல் இந்த சாரணர் இயக்கத்தை 1908 ஆண்டு தோற்றுவித்தார்.
இந்த இயக்கம் மற்ற நாடுகளிலும் விரிவடைந்து மாணவப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை வளர்த்து வருகிறது.
அத்தகைய சிறப்பு மிக்க இந்த இயக்கத்தின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் சாரண, சாரணியர் இயக்க புரவலராக இருந்த அமைச்சர், தற்போது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த முறை இந்தத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தேர்தலில் போட்டியிட்டு முன்னாள் கல்வி இயக்குநர் மணியிடம் தோல்வியடைந்த நிலையில், இம்முறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலை.ரா
ஆன்லைன் ரம்மி: தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை!