Mini bus service again in Tamil Nadu?

தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் சேவை?

தமிழகம்

மினி பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து அதற்கான ஒருங்கிணைந்த திட்ட வரைவு அறிக்கை வெளியாகியுள்ளது.

குறைந்த தூரத்திற்கான சாலை போக்குவரத்து சேவையில் சிற்றுந்து எனப்படும் மின் பஸ் சேவை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனினும் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் புதிய வரைவு திட்ட அறிக்கையின் படி தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களை இயக்குவதற்காக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும்.

மேலும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என RTOக்கள் முடிவு செய்யலாம்.

18 கி.மீ. சேவை இல்லாத வழித்தடத்திலும் 8 கி.மீ. சேவை உள்ள வழித்தடத்திலும் என அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும்.

ஒரு மினி பஸ்ஸில் அதிகபட்சமாக 25 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி இருக்கலாம்.

அனைத்து மினி பஸ்களிலும் கண்டிப்பாக ஜிபிஎஸ் வசதி பொருத்த வேண்டும்.

இது தொடர்பாக பொதுமக்கள் 30 நாட்களுக்குள் (ஜூலை 14) தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 22ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறும் என  என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிச்டோபர் ஜெமா

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி!

T20WorldCup : லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான்… பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விளாசல்!

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0