கொரோனாவுக்குப் பிறகு உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. குறிப்பாக உணவில் அதிக மாற்றம் உண்டாகியுள்ளது.
அன்றாட உணவில் அரிசி, கோதுமை உணவுகளை தாண்டி சிறு தானியங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நீங்களும் இந்த வரகு – மிளகு கிச்சடி செய்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
வரகு அரிசி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகு – ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடித்தது)
தோல் நீக்கிய பூண்டு – 5 பற்கள்
கடுகு – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வரகு அரிசியைப் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு பொடித்த மிளகு, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது வரகு அரிசியைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து சிறிதளவு எண்ணெய்விட்டு மீண்டும் மூடி, வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.
கிச்சன் கீர்த்தனா: கருப்பட்டி மைசூர்பாகு