கிச்சன் கீர்த்தனா : மலாய் பேடா

Published On:

| By Minnambalam

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் தவறானது.

எப்போதோ ஒரு பண்டிகை நாளில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு, கூடுதலாக ஒரு மாத்திரை போடுவதில் தவறில்லை என்றாலும் அப்படி இனிப்பு சாப்பிட விரும்புபவர்கள் ஸ்வீட்னர் பயன்படுத்தி இந்த மலாய் பேடா சாப்பிடலாம்.

என்ன தேவை?

கொழுப்பு நீக்கிய பால் – ஒரு லிட்டர்
குங்குமப்பூ – சிறிதளவு
சிட்ரிக் ஆஸிட் – கால் டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்
ஸ்வீட்னர் – 4 பாக்கெட்.

எப்படிச் செய்வது?

எட்டு டீஸ்பூன் பாலை எடுத்துவைத்துவிட்டு, மீதிப்பாலை பாதி அளவாகும் வரை நன்றாகக் காய்ச்சவும்.

சிறிய கிண்ணத்தில் குங்குமப்பூவைப் போட்டு, அதில் நான்கு டீஸ்பூன் பாலை ஊற்றி, நன்றாக தேய்த்துவிடவும். சிறிது தண்ணீரில் சிட்ரிக் ஆஸிட்டைக் கரைத்து, அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் பாலில் ஊற்றவும். பால் திரியும் வரை சிட்ரிக் ஆஸிட் கரைசலை ஊற்றவும்.

இன்னும் மீதி உள்ள நான்கு டீஸ்பூன் பாலில் சோள மாவைக் கரைத்துவிட்டு, அதையும் அடுப்பில் கொதிக்கும் பாலில் ஊற்றி இடைவிடாது கிளறவும். கொதிக்கும் பால் கலவை, கெட்டியாக கோவா மாதிரி வரும்போது, ஏலக்காய்தூள் தூவி, நன்றாகக் கலந்து அடுப்பை அணைத்து விடவும். ஸ்வீட்னரைக் கலந்து, சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

கோதுமை ரவை கட்லெட்

வீட்டிலேயே பலகாரம் தயாரிக்கப் போறீங்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share