காலாண்டு விடுமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் வித்தியாசமாக செய்து கொடுக்க இந்த மிளகு சம்பா உதவும். மழைக்காலத்துக்கேற்ற ருசியான டிஷ் இது.
என்ன தேவை?
பொன்னி பச்சரிசி – அரை கப்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கடுகு, உளுந்து – அரை டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 4 (உடைத்துக் கொள்ளவும்)
கறிவேப்பிலை – சிறிது
நெய் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பொன்னி பச்சரிசியை இரண்டு முறை கழுவி குக்கரில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். பின் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும். வாணலியை சூடாக்கி அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து இடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, உளுந்து சேர்த்து வெடித்ததும் உடைத்த முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஆறவைத்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின் இடித்த கலவையைச் சேர்த்து மெதுவாகக் கிளறி இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: நாட்டுக்கோழி முட்டையில்தான் சத்துகள் அதிகம் உள்ளதா?
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கீரை அடை!
இந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லை – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: சீனியர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்… பொன்முடியோடு முடிந்து போன பின்னணி!