உருவானது மிக்ஜாம் புயல்… சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிசம்பர் 3) தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாறி அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு ஆந்திரம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு கடற்கரையை அடையும் என ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (டிசம்பர் 2 ) நள்ளிரவு 11:30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடலில் புதுவைலிருந்து சுமார் 330 கி. மீ கிழக்கு -தென்கிழக்கேயும், சென்னையிலிருந்து சுமார் 340 கி. மீ தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆந்திரா – தமிழ்நாடு எல்லை மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தற்போது மிக்ஜாம் புயல் உருவாகியுள்ளது என்றும், சென்னையில் இருந்து 310 கி.மீ தூரத்தில் புயல் உள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சென்னை, புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடலோரப்பகுதிகளை ஒட்டி வட திசையில் நகர்ந்து செல்லும் புயலானது தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிபட்டணத்திற்கும் இடையே 5-ம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரு உடல்… இரண்டு உயிர்… ரசிகர்களை கவர்ந்த ஆளவந்தான் புது ட்ரெய்லர்!
தெலங்கானா: இரு தொகுதிகளிலும் பின் தங்கும் கே.சி.ஆர்.