மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப பிரச்சனையால் இரண்டாவது நாளாக இன்றும் (ஜூலை 20) சென்னையில் விமான சேவை முடங்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல்வேறு மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது.
இந்தநிலையில், கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய நேற்று (ஜூலை 19) பால்கன் சென்சாரை அப்டேட் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகள் முடங்கின. குறிப்பாக இந்தியாவில் இண்டிகோ, ஏர் இண்டியா, ஆகாசா ஏர் உள்ளிட்ட விமான சேவைகள் முடங்கின. இதனால் நேற்று மட்டும் இந்தியாவில் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான நிலையங்களில் உள்ள டிஜிட்டல் போர்டுகள் செயல்படாததால் விமான வருகை, புறப்பாடு விவரங்கள் பலகையில் எழுதிவைக்கப்பட்டன. மேலும், பயணிகளுக்கு போர்டிங் பாஸ் எடுத்துக்கொடுக்க முடியாத நிலையில், கைகளால் போர்டிங் பாஸ் எடுத்துக்கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 36 விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமமடைந்துள்ளனர்.
மேலும், நேற்று மட்டும் உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், 1400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தூத்துக்குடி: தனியார் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு… 21 பேருக்கு மூச்சுத்திணறல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு… ஷாக்கான ரஞ்சித்