தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (டிசம்பர் 3) புயலாக வலுப்பெற உள்ளது. மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகல் மசூலிப்பட்டினத்திற்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இன்னும் 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. மாலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 390 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 380 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கு திசையில் 520 தொலைவிலும் பாபட்லாவிற்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 620 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மருத்துவமனையில் இருந்து விஜயகாந்தின் புதிய போட்டோ!
NZ vs BAN: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்