அடுத்த 6 மணி நேரத்தில் சென்னையில் மழை குறையும்: பாலச்சந்திரன்

தமிழகம்

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், அடுத்த 6 மணி நேரத்திற்கு பிறகு சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மிக்ஜாம் தீவிர புயல் தற்பொழுது சென்னைக்கு கிழக்கு வட கிழக்கில் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இன்று காலை 8.30 மணிக்கும் மாலை 5.30 மணிக்குமான ரேடார் டேட்டா அடிப்படையில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் வட மேற்கு திசை காற்றுகள் மேற்கு திசை காற்றுகளாக மாறியுள்ளது.

வளிமண்டலத்தின் நடுப்பகுதியில் வட திசை காற்றுகள் வட மேற்கு திசை காற்றுகளாக மாறியுள்ளது. வளிமண்டலத்தின் மேலடுக்கில் கிழக்கு திசை காற்று வட மேற்கு திசை காற்றாக மாறியுள்ளது. இந்த காற்றின் மாற்றங்களின் அடிப்படையிலும் இதர வானிலை நிலவரங்களின் அடிப்படையிலும் இந்த தீவிர புயல் சென்னையிலிருந்து வட திசையில் நகர துவங்கியுள்ளது. இதன்காரணமாக பலத்த காற்றும் மழையும் அடுத்து வருகின்ற 6 மணி நேரத்திற்கு பிறகு படிப்படியாக குறையும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இது திமுக புயலா? அதிமுக புயலா? – அப்டேட் குமாரு

மிக்ஜாம் புயல்: அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்த ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *