மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது
அந்தவகையில், பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி இடையே உள்ள பாலம் எண் 14 இல் அபாய நிலைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுதாக தெற்கு ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் முதல் மேட்டுப்பாளையம் வரை செல்லும் நீலகிரி விரைவு ரயில் ( ரயில் எண் : 12671 ) , சென்னை – கோயம்புத்தூர் சேரன் விரைவு ரயில் ( ரயில் எண் : 12673 ) , சென்னை – போடியநாயக்கனூர் ரயில் ( ரயில் எண் : 20601 ), சென்னை – ஆலப்புழா ( ரயில் எண் : 22639 ),
சென்னை – காவேரி எக்ஸ்பிரஸ் ( ரயில் எண் : 16021), செங்கல்பட்டு – கச்செகுடா ( ரயில் எண் : 17651), சென்னை – திருவனந்தபுரம் ( ரயில் எண் : 12623 ) ,கேஎஸ்ஆர் பெங்களூரு விரைவு ரயில் ( ரயில் எண் : 12657), பாலக்காடு ரயில் உட்பட சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சண்முகப் பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மிக்ஜாம் புயல்: அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்த ஸ்டாலின்
CycloneMichaung புயல் எங்கே உள்ளது? எப்படி நகர்கிறது? சென்னை எப்போது தப்பிக்கும்?