இன்று கரையை கடக்கும் மிக்ஜாம் புயல்!
இன்று காலை ஆந்திர கடற்கரையை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிப்பட்டணத்திற்கும் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 5) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக்கடலின் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடற்கரையோரங்களில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது.
சென்னைக்கு வடக்கே 200 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல் விலகிச்சென்றது. மசூலிப்பட்டினத்தின் தெற்கு தென்மேற்கு மையத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி புயல் நகர்ந்து வருகிறது.
மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 20 கி மீ வடக்கு -வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இன்று காலை ஆந்திர கடற்கரையை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிபட்டணத்திற்கும் இடையே, பாபட்லாவிற்கு அருகே கரையை கடக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: இஞ்சி – பூண்டு – மிளகு ரசம்
MICHAUNG புயல்: தென்றலாக மாறிய ஆளுநர் ரவி
கரும்புகளுக்கு கலர் பலூன்கள்: காரணம் என்ன?