சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 8) நியாயவிலைக்கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு இன்று (டிசம்பர் 7) தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது முடங்கியுள்ளது.
மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படக்கூடிய ரேஷன் கடைகளுக்கு வழக்கமாக வெள்ளிக்கிழமை அன்று விடுமுறையாகும்.
இந்தசூழலில் மிக்ஜாம் புயல் மீட்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செமஸ்டர் தேர்வுகள் எப்போது?: அண்ணா பல்கலை அறிவிப்பு!
வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வாய்த் துடுக்கு: திமுக கடுங்கோபம்!