கைகளில் கிடைக்கிற காய்கறிகள், பழங்களை எல்லாம் வெட்டிப்போடுவது, கொஞ்சம் உப்பும், எலுமிச்சைப்பழச் சாறும் சேர்த்துக் கலந்து சாப்பிடுவது… சாலட் என்றால் இப்படித்தான் செய்வார்கள் பலரும். ஒரு மாறுதலுக்கு வித்தியாசமான, வேற லெவல் டேஸ்ட்டில் இந்த கார்ன் சாலட் செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்.
என்ன தேவை?
வெங்காயம் – ஒன்று (தோலுரித்துப் பொடியாக நறுக்கவும்)
கேரட், வெள்ளரிக்காய் – தலா ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – கால் கப்
கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள்,
உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து இரும்புச் சத்துமிக்க இந்த சாலட்டைப் பரிமாறவும்.
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை