சென்னை மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநகராட்சியின் குடிநீர் வினியோகிக்கும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஆனால் லாரிகளுக்கு போதிய அளவு தண்ணீர் வழங்காமல் நீண்ட வரிசையில் காத்திருக்க வைப்பதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் லாரிகளை காத்திருக்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நாளை (ஜூன் 1) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதனால் கோடம்பாக்கம், தி.நகர், ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் அபாயம் இருந்தது.
இந்நிலையில் போரூர் அருகே குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் சப்ளை பாதிப்பு என மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நாளை முதல் சரியாக குடிநீர் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து நாளை முதல் வேலைநிறுத்தம் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆகையால் வழக்கம் போல் நாளை தண்ணீர் லாரிகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
மேகதாது அணை திட்டம்: கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு!
“செங்கோல் ஒரு பரிசுதான்”: என்.ராம் விளக்கம்!