கோயம்பேடு வழி மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்!

தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயணிகளின் வசதிக்காகவும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஐந்து நிமிட இடைவெளியில் ஒரு ரயில் இயக்கப்படுவதால் அலுவலகம், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (ஜனவரி 21) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், “மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையில் சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்கள் இயக்குவதில் தற்காலிகமாக சற்று நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விம்கோ நகர் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியிலும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் முதல் பரங்கிமலை  வரை 6 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வல்லுனர்கள் கோளாறை சரிபார்த்து வருகின்றனர். இந்த கோளாறு சரி செய்யப்பட்டு விரைவில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

பழனிசாமி வாத்தியாராக கவுண்டமணி

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி” – ஓபிஎஸ்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts