சென்ட்ரல் டூ ஏர்போர்ட் : மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு…

தமிழகம்

சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று(மே 15) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மீனம்பாக்கம் – ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள நீல வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே விமான நிலையம் செல்லும் பயணிகள், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி மாற்று ரயிலில் செல்ல வேண்டும்.

தொழில்நுட்ப கோளாறு சரி செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான நீல வழித்தடத்திலும், சென்ட்ரல் மெட்ரோ முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான பச்சை வழித்தடத்திலும் வார நாட்கள் அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்” என்று தெரிவித்துள்ளது.

சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரைவிலான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 80 லட்சத்து 87 ஆயிரத்து 712 பயணிகள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

11 மாதங்களாக சிறை… செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வேலைவாய்ப்பு நிறுவனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *