வரும் திங்கட்கிழமை முதல் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் மூலம் தினசரி ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். அதனால் சாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாமல் பயணம் செய்வதற்காக பெரும்பாலானோர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை தேர்வு செய்கின்றனர்.
தற்போது மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகளின் வசதிக்கு ஏற்பவும், விடுமுறை நாட்களிலும் கூடுதலாக மெட்ரோ ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களில் நெரிசல் மிகு நேரம் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் வரும் நவம்பர் 27 ஆம் தேதி முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் மெட்ரோ ரயிலுக்காக காத்திருக்கும் நேரம் குறையும் என்று பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
IPL2024: ஐபிஎல் ஏலத்தில் தோனி தட்டி தூக்கப்போகும் வீரர்கள்?
அரசியலமைப்பு சட்டம் முழுமையடையவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி