மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான டெண்டரை கோரியது மெட்ரோ நிர்வாகம்.
போக்குவரத்து நெரிசலையும், பேருந்துகளில் கூட்ட நெரிசலை கட்டுபத்துவதற்கும், மக்களின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.
சென்னையில் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தைப் போல மதுரை, கோவை, திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் அறிவிப்பை அமல்படுத்தும் வகையில் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கையைச் செயல்படுத்துவதற்கான பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதேபோல மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்கான ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
120 நாட்களுக்குள் டெண்டர் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கக் கால அவகாசம் வழங்கியுள்ளது மெட்ரோ நிர்வாகம். மார்ச் மாதத்தில் இருந்து இந்த பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோனிஷா