தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்துகள், ரயில், விமானத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மக்கள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். சென்னையில் பேருந்து, ரயில், விமான நிலையங்களுக்கு செல்வதற்கு மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரத்தில் ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, நாளை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை நவம்பர் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சட்டமன்றத்தில் அநாகரீக பேச்சு… மன்னிப்பு கோரினார் நிதிஷ் குமார்
கலைஞர் ரூட்டில் இருந்து மோடி ரூட்டுக்கு மாறுகிறதா அரசுப் போக்குவரத்துக் கழகம்?