மெட்ரோ சேவை பாதிப்பு: பயணிகள் அவதி!

Published On:

| By Monisha

metro rail service affected

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை இன்று (ஆகஸ்ட் 31) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் உரிய நேரத்திற்கு சென்றடைய முடியும் என்பதால் பெரும்பாலான மக்களின் தேர்வாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் மற்றும் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக சின்னமலையில் இருந்து ஆலந்தூர் வரை ஒற்றை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது.

விம்கோ நகர் டெப்போவில் இருந்து நீல வழித்தடத்தில் உள்ள சின்ன மலை வரையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பணிக்கு செல்லும் நேரம் என்பதால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மோனிஷா

முதல்வர் ஸ்டாலின் ஆடியோ பிரச்சாரம்!

மும்பையில் இன்று இந்தியா கூட்டணி மூன்றாவது கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share