Get Around Chennai Today at Rs 5
தனது நிறுவன நாளை கொண்டாடும் விதமாக 5 ரூபாய் கட்டணத்தில் இன்று (டிசம்பர் 17) பயணம் செய்யலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் தற்போது வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கிறது மெட்ரோ ரயில் சேவை. சாலை போக்குவரத்து நெருக்கடியில் இருந்து தப்பிக்க இன்று நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தனது நிறுவன நாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி சென்னையின் எந்த பகுதிக்கும் 5 ரூபாயில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், மிக்ஜாம் புயலால் பொதுமக்கள் இந்த சலுகையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போனதால் இந்த சலுகையை வேறு நாளுக்கு மாற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி இன்று (டிசம்பர் 17) 5 ரூபாய் கட்டணத்தில் பொதுமக்கள் சென்னையில் எங்கும் பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் மக்கள் கூட்டம் இன்று அதிகம் காணப்படும் என்பதால் கூடுதல் ரயில்களை இயக்கவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
நிபந்தனை உள்ளது!
எனினும் இந்த 5 ரூபாய் சலுகையில் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கியூ ஆர் டிக்கெட்டுகள், மொபைல் கியூ ஆர், பேடிஎம், வாட்ஸ் அப், போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு மட்டுமே 5 ரூபாய் சலுகை பொருந்தும்.
சிங்கார சென்னை அட்டை, கவுண்டர் டிக்கெட், பாஸ்கள், சிஎம்ஆர்எல் மொபைல் ஆப் உள்ளிட்டவற்றின் மூலம் டிக்கெட் எடுப்போருக்கு 5 ரூபாய் சலுகை பொருந்தாது என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வரலாறு காணாத பனி: சீனாவை எச்சரிக்கும் சூழலியல் ஆர்வலர்கள்!
வேகமாக பரவும் ஜே.என்.1 கொரோனா… அறிகுறிகளும் முன்னெச்சரிக்கையும்!
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வராதீங்க: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
Get Around Chennai Today at Rs 5