வெளியூரிலிருந்து வரும் பஸ், ரயில் பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் விரைவில் தகவல் பலகைகளை வைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்போது அவசியமாகிவிட்டது. தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களும் அதை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் ரயில்கள், பஸ்கள் மூலம் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்துக்கான வழிகளை வழங்க சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் விரைவில் தகவல் பலகைகளை வைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள மெட்ரோ அதிகாரிகள், “பஸ், ரயில்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து செல்கிறார்கள். அவர்களில் பலருக்கு மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் உள்ள இடம் தெரியாது. எனவே இந்த இடங்களில் தகவல் பலகை பொறுத்தப்படும்.
இந்த பலகையானது பயணிகளுக்கு அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்லும் வழிகளை மட்டும் காட்டாமல் நகரத்தில் உள்ள சில முக்கிய இடங்களுக்கான கட்டணங்கள், ரயில் சேவையின் நேரம், வழித்தடங்கள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.
அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை மெட்ரோ ரெயில் சேவை குறித்து அறிந்து அதற்கேற்றவாறு பயணத்தைத் திட்டமிட இது உதவியாக இருக்கும். பயணிகள் பஸ், ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு மெட்ரோ ரெயில் சேவை, அருகில் உள்ள இடங்கள் குறித்து தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.
ராஜ்
வேலைவாய்ப்பு : தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!