ஏழு நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம்

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 13) தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்‌ காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில்‌ தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்‌.

இது மேற்கு – வடமேற்கு திசையில்‌ நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 16ஆம்‌ தேதியில் நிலவக்கூடும்‌. மேலும் தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவுகிறது.

இதன்‌ காரணமாக, கடலோர தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களிலும்‌, உள்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இதன்காரணமாக, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌,திருவாரூர்‌, புதுக்கோட்டை மற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌, அவ்வப்போது ஒரு சில இடங்களில்‌ பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்‌சியஸாகவும்‌ இருக்கக்கூடும்‌.

தமிழக கடலோர பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ இலங்கை கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன கட்டணம் உயர்வு!

சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
3

1 thought on “ஏழு நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *