தமிழகத்தில் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி தேதிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 13 ) வெளியிட்டுள்ள அறிக்கையில்
கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (டிசம்பர் 14 ) முதல் டிசம்பர் 17 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
![Meteorological Department rain in Tamil Nadu till December 17](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/F4cf3gmJ-WhatsApp-Image-2022-12-13-at-17.05.49.jpg)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
![Meteorological Department rain in Tamil Nadu till December 17](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/iRHHkMJ7-WhatsApp-Image-2022-12-13-at-17.08.40-1024x576.jpg)
இன்று முதல் டிசம்பர் 16 வரை லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும்
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்