நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் வணிகர் சங்க நிர்வாகிகள்!

தமிழகம்

தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக நாளை (ஆகஸ்ட் 5) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வணிகர் சங்க நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மின்சார மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்க தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது ஒருமுனை (சிங்கிள் பேஸ்) போர்டுகளுக்கு 300  ரூபாயும் மும்முனை இணைப்புக்கு 720 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதையும் அதிகப்படுத்திட மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே நிதிச்சுமையில் உள்ள வணிகர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதோடு, வணிகத்தை விட்டு வெளியேறும் நிலைமை உருவாகிவிடக் கூடாது என்பதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு, மின் மீட்டர் வாடகை, மின் இணைப்பு சாதனங்களுக்குக் கூடுதல் கட்டணம் போன்றவற்றை தவிர்த்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஜி.எஸ்.டி துறையில் அமலாக்கத்துறையை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், அதிகபட்சம் 28 சதவிகித வரியைக் குறைக்க வலியுறுத்தியும் தென்மண்டலம் சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வணிக நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நாளை (ஆகஸ்ட் 5) சந்தித்து முறையிட இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி – புளி உப்புமா கொழுக்கட்டை

மாஜி அமைச்சருக்கு எதிரான வழக்கு ரத்து!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *