நாட்டில் மெடிக்கல் கல்லூரிகள் 102 சதவிகிதமும், மெடிக்கல் சீட்டுகள் 130 சதவிகிதமும் உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு அமைந்தது. அதன்பிறகு, நீட் தேர்வும் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், ராஜ்யசபாவில் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. 2024 ஆம் ஆண்டு 780 கல்லூரிகளாக உயர்ந்துள்ளன. இது 102 சதவிகிதம் அதிகமாகும். 51,348 மெடிக்கல் சீட்டுகள் தற்போது 1,18, 137 சீட்டுகளாக அதிகரித்துள்ளது. இது 130 சதவிகிதம் அதிகம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபர், தத்ரா நாகர் ஹவேலி, மற்றும் மிசோரம், நாகலாந்து போன்ற மாநிலங்களில் மருத்துவக்கல்லூரிகள் இல்லாமல் இருந்தன. தற்போது இங்கு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்த வரை 2014 ஆம் ஆண்டு 5,835 சீட்டுகள் இருந்தன. இப்போது, 12,050 சீட்டுகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் தற்போது 74 மெடிக்கல் கல்லூரிகள் உள்ளன. இதில், 35 அரசுக்கு சொந்தமானவை. இந்தியாவில் கடைசி மாநிலமாக உதயமான தெலங்கானாவில் 9,040 மெடிக்கல் சீட்டுகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு 3,749 மெடிக்கல் சீட்டுகளை மட்டுமே கொண்டிருந்த உத்தரபிரதேச மாநிலத்தில் மும்மடங்கு சீட்டுகள் உயர்ந்துள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக இந்த மாநிலத்தில் 12,425 மெடிக்கல் சீட்டுகள் உள்ளன” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன?
“நாதக பிரிவினைவாத இயக்கமா?” : வருண் குமார் ஐபிஎஸுக்கு சீமான் காட்டமான பதில்!