திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் பணிபுரிந்த ரேகா மருத்துவ பரிசோதனைக்காக இன்று (ஜனவரி 25) சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
திருவான்மியூரில் உள்ள பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மகன் ஆண்டோ மதிவாணனின் வீட்டில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்த ரேகா என்ற இளம்பெண்ணை ஆண்டோ மதிவாணனின் மனைவி மெர்லினா கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
கரண்டி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் அடிப்பது, ஆபாசமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது என தொடர்ந்து பல சித்ரவதைகளை அந்த இளம்பெண் அனுபவித்து வந்துள்ளார்.
இது குறித்து ரேகா நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா மீது குழந்தை பாதுகாப்பு சட்டம், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
ஆனால் ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இதனையடுத்து இருவரையும் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இருவரும் சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலித்து சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக பணிப்பெண் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு இன்று அழைத்து வரப்பட்டார். பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு பிரிவு மருத்துவர்கள் அடங்கிய 7 பேர் கொண்ட மருத்துவக் குழு பணிப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ப்ளூ ஸ்டார் : ட்விட்டர் விமர்சனம்!
செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்!