போலி ஆவணத்துடன் வந்த மாணவர்… மருத்துவ கலந்தாய்வில் பரபரப்பு!

Published On:

| By Minnambalam Login1

medical counselling fake list

சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்விற்கு இன்று(செப்டம்பர் 4) வந்த ஒரு மாணவரிடம் இருந்த போலி ஆவணத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியானதற்கு பின்பு தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.

சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் இன்று மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்துகொண்டிருந்தது.

கலந்தாய்விற்கு வந்த மாணவர் ஒருவர், தரவரிசைப் பட்டியலில் தனது பெயர் இருந்தும், ஏன் தன்னை அழைக்கவில்லை என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரிடம் இருந்த தரவரிசை பட்டியலை வாங்கி பார்த்துள்ளார்கள். அப்போது அவரிடம் இருந்தது போலியான ஆவணம் என்று அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இதனை அடுத்து கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் அங்கு வந்து, அந்த மாணவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, திருப்பத்தூரைச் சேர்ந்த அந்த மாணவர், அவரது ஊரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் வெங்கடஜலபதி என்பவரிடம் ரூ 1.5 லட்சம் கொடுத்து மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்துத் தருமாறு சொல்லியிருக்கிறார். ஆனால் வெங்கடஜலபதி அவருக்குப் போலியான ஆவணத்தைத் தந்து ஏமாற்றியுள்ளார் என்பதை விசாரணையில் காவல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, போலி ஆவணம் கொடுத்து மாணவரை ஏமாற்றிய வெங்கடஜலபதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

விடுதலைப் புலிகள் இயக்கம் தடை மீதான வழக்கு : வைகோவுக்கு மறுப்பு!

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் : பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

“ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடினு விஜய் கலக்கியிருக்கார்” : அர்ச்சனா கல்பாத்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel