மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நான்காவது நாளாக இன்றும் (ஏப்ரல் 6) தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு புகாரளித்தனர்.
சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில், செம்மங்குளம் பகுதியில் இருந்து ஆரோக்கியநாதபுரம் பகுதிக்கு சிறுத்தை இடம்பெயர்ந்தது. தொடர்ந்து சிறுத்தை இடம்பெயர்ந்து வருவதால் சிறுத்தையை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
சித்தர்காடு தண்டபாணி செட்டி பகுதியில் ஆடு ஒன்றை நேற்று சிறுத்தை கடித்து கொன்றது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறை ரயில் நிலையம் பகுதியில் மற்றொரு ஆட்டை சிறுத்தை இன்று கடித்துக் கொன்றுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் காலடி தடத்தை வைத்து தேடி வருகின்றனர்.
தொடர்ந்து போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிப்பதற்காக ஆனைமலையில் இருந்து மசினகுடி டி23 புலியை பிடித்த சிறப்பு குழு மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ளனர். மேலும், சிறுத்தையை பிடிக்க ராட்சத கூண்டுகள், வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
IPL 2024 CSK Vs SRH: மார்க்ரம் அதிரடி… சென்னை அணியை வீழ்த்திய ஹைதராபாத்