கிச்சன் கீர்த்தனா : மத்தி மீன் குருமா

தமிழகம்

புரட்டாசி முடிஞ்சாச்சு… வீட்டுச் சாப்பாடாக இருக்க வேண்டும்… அதே நேரம் ஹோட்டல் ருசியும் வேண்டும்… இதுதான் பலரின் விருப்பமாக உள்ள சூழலில் – அப்படி ஆசைப்படுவோருக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த மத்தி மீன் குருமா ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

மத்தி மீன் – அரை கிலோ
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 15
(இரண்டாக நறுக்கவும்)
கடுகு – 1 டீஸ்பூன்
புளி – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு

அரைக்க…

தேங்காய் – ஒன்றில் பாதி (துருவிக் கொள்ளவும்)
கசகசா – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 3 பல்
மல்லி ( தனியா) – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். மீனை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும்.

இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலா வாசனை போகும் வரை வதக்கி, மத்தி மீனை அதில் சேர்த்து கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைத்து மீன் நன்கு வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

வஞ்சிரம் மீன் குழம்பு

கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரைச் சாறு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *