குளிர்காலத்தில் நாவுக்கு இதமான சைடிஷ் இந்த மட்டர் பனீர். சப்பாத்தி, பூரி, நாண், ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற ஜோடி. குளிர்காலத்தில் பச்சைப் பட்டாணி மலிவாக கிடைக்கும் என்பதால் இந்த டிஷ்ஷை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம்.
என்ன தேவை?
பனீர் – 100 கிராம்
பச்சைப் பட்டாணி – 50 கிராம்
தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
அரைத்த முந்திரி விழுது – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன்
சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று
புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சைப் பட்டாணியை வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, வேக வைத்த பச்சைப் பட்டாணி, பனீர் துண்டுகள் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கிளறவும். இத்துடன் அரைத்த முந்திரி விழுது சேர்த்து, கலவை கொதித்து வரும்போது கொத்தமல்லித்தழை, புதினா தூவி இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஷக்கர்கந்தி (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) சாட்
சண்டே ஸ்பெஷல்: சாப்பிடும் உணவு, தொண்டைக் குழியிலேயே நிற்கிறதா… தீர்வு என்ன?