கிச்சன் கீர்த்தனா: கிச்சியா!

Published On:

| By Kavi

குஜராத்வாசிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு இந்த கிச்சியா. பண்டிகைகளின்போதும் விருந்தினர்களின் வருகையின்போதும் தவறாமல் இடம்பெறும் இந்த கிச்சியாவை இந்த வார வீண்ட் ஸ்பெஷலாக நீங்களும் செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

அரிசி மாவு – ஒரு கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
ஓமம் – அரை டீஸ்பூன்
வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இஞ்சி விழுது – அரை டீஸ்பூன்
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அலங்கரிக்க…
ஊறுகாய் மசாலா பொடி – 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் சீரகம், ஓமம், வெள்ளை எள்,  பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, எண்ணெய், உப்பு, சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, சமையல் சோடா, அரிசி மாவு சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் மாவைச் சிறு சிறு கொழுக்கட்டைகளாகச் செய்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். கொழுக்கட்டைகள் மீது ஊறுகாய் மசாலா பொடி தூவி,  நல்லெண்ணெய் ஊற்றிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை சங்கமம் நிகழ்வில் சம்பவம் : மேடையேறி சென்று பாராட்டிய ஸ்டாலின்

கோவை விமான நிலையம் படைத்த புதிய சாதனை!

சென்னை ரிட்டர்ன்ஸ் பரிதாபங்கள் : அப்டேட் குமாரு!

‘சீனா முழுவதும் நாறுகிறது’- பாகிஸ்தான் டாக்டர் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share