கிச்சன் கீர்த்தனா : மசாலா சப்பாத்தி!

சப்பாத்தி என்றால் அதற்கு சைடிஷ் செய்ய வேண்டுமே என்று நினைப்பவர்கள் அந்த சப்பாத்திகளை வைத்தே இந்த மசாலா சப்பாத்தி செய்து அசத்தலாம். குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியமான இந்தச் சப்பாத்தி உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும்.

என்ன தேவை?

சப்பாத்தி – 4
பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி  – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
வேகவைத்த பட்டாணி – ஒரு கைப்பிடி
மல்லித்தூள் (தனியாத் தூள்) – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சோம்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – அரை டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சப்பாத்தியைச் சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, வேகவைத்த பட்டாணி சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை தண்ணீரைத் தெளித்து நன்கு வதக்கவும். பிறகு, சப்பாத்தித் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி, கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: சப்பாத்தியில் உப்பு இருப்பதால், வெங்காயம் பட்டாணிக் கலவைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்க்கவும். விரும்பினால் உங்களுக்குப் பிடித்தமான (கேரட், முட்டைகோஸ், பச்சைக் குடமிளகாய்) காய்கறிகளைச் சேர்க்கலாம்.

கிச்சன் கீர்த்தனா: ராகி கொழுக்கட்டை!

கிச்சன் கீர்த்தனா: காராமணி ராகி சேவை

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts