தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்படையினர் அட்டூழியம்!

தமிழகம்

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் மீது இன்று (அக்டோபர் 21) அதிகாலையில் இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறை மீனவர்கள் இன்று (அக்டோபர் 21) அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

ஒரே ஒரு படகு மட்டும் கடலில் இருந்ததால் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் ஒலிபெருக்கி மூலமாகப் படகை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால், கடற்படையினரின் உத்தரவை மீறி மீனவர்கள் படகை நிறுத்தாமல் முன்னேறிச் சென்றதால் சந்தேகத்தின் பேரில் கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் காயமடந்தை மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேலை கடற்படையினர் மீட்டு, சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து மீனவர்கள், “இரவு நேரம் என்பதாலும் கனமழை பெய்து கொண்டிருந்ததாலும் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்ததை எங்களால் சரியாக் கேட்க இயலவில்லை. ஆகையால் தான் படகை நிறுத்தாமல் சென்றோம்.

ஆனால், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் படகை நிறுத்திவிட்டோம்” என்று கூறியுள்ளனர். மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், மீனவர்களை கைது செய்வதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய கடற்படையினரே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

மீண்டும் வில்லன் அவதாரமெடுக்கும் கௌதம் மேனன்

போக்குவரத்து விதிமீறல் அரசாணை: நாராயணன் திருப்பதி வரவேற்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *