மெரினா பீச்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை நாளை திறப்பு!

தமிழகம்

மெரினா கடற்கரையைக் கண்டுகளிக்கும் வகையில், நாளை (நவம்பர் 27) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை திறந்துவைக்கப்பட இருக்கிறது.

சென்னை மெரினா கடற்கரைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படையெடுப்பது வழக்கம்.

அதேநேரத்தில், மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிப்பதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இதையடுத்து, அவர்களும் கடலை சிரமமின்றி ரசிக்கும் வகையில், சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்க மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் நடைபாதை அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.

இதன்படி விவேகானந்தா இல்லம் எதிரே சவுக்கு, கருவேல மரங்களைக் கொண்டு ரூபாய் 1 கோடியே 10 லட்சம் மதிப்பில், 380 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் குறித்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்த நிலையில் நாளை (நவம்பர் 27) சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நடைபாதை வழியாக செல்லும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிப்பதற்காக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 8.8 லட்சம் மதிப்பில் மணல் பரப்பில் இயக்கும் 4 சிறப்பு சக்கர நாற்காலிகள் மாநகராட்சியால் வாங்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

கால்பந்து உலகக்கோப்பை: டிராவில் முடிந்த விறுவிறு போட்டி!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *