அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி ஐயா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரை வழிபடும் மக்கள் பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்புக்கு வருவார்கள்.
இந்நிலையில் வைகுண்ட சாமியின் 191ஆவது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக வரும் 11ஆம் தேதி சனிக்கிழமை மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் ஐயா வைகுண்டர். அவரை சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த அவதாரமாக கருதி மக்கள் வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஈரோடு இடைத்தேர்தல்: டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக!
நாகாலாந்து, திரிபுரா மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி!