இந்தியாவில் 2025-க்குள் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறுவார்கள்!

தமிழகம்

இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக டீம்லீஸ் டிஜிட்டல் (TeamLease Digital) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ‘டேலண்ட் எக்ஸோடஸ்’ என்ற ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 57 சதவிகித ஐடி வல்லுநர்கள் வருங்காலத்தில் ஐடி துறைக்குத் திரும்புவதில் ஆர்வம்கொள்ள மாட்டார்கள் என்றும்,

2022ஆம் நிதியாண்டில் 49 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, 2023 நிதியாண்டுக்கான ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 55 சதவிகிதம் வரை வளர்ச்சியடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் சம்பள உயர்வு செயல்திறனை மேம்படுத்தி, வேலை திருப்தியை அதிகரித்தாலும் 2025 ஆண்டுக்குள் 20 லட்சம் முதல் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டில் ஐடி சேவைகள் துறையின் வீழ்ச்சிக்கு புதிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிகரிப்பதே முக்கிய காரணமாகும் என இந்த ஆய்வு கூறுகிறது.

ஐடி நிறுவனங்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டு வருவதால், அங்கு நிறுவனங்களின் சிறந்த ஊழியர்கள் தானாக முன்வந்து அதிக அளவில் வெளியேறுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-ராஜ்

ஏழு தென்னக ரயில்களின் வேகம் அதிகரிப்பு: பயண நேரம் குறையும்!

அனில் சவுகானுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு

+1
0
+1
1
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *