மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் நாகர்கோவில் இளைஞரிடம் போலீசார் இன்று (நவம்பர் 21) விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களூரில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் நேற்று தெரிவித்தார்.

இந்தநிலையில், குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கர்நாடக போலீசார் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக் என்பவருக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவரது தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு சென்றுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து நாகர்கோவிலில் வசித்து வரும் அசாமைச் சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவரை நாகர்கோவில் கோட்டார் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஜீம் ரகுமான் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு பாஸ்போர்ட் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். மங்களூரு குக்கர் வெடிகுண்டு விபத்தில் அஜீம் ரகுமானுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.
செல்வம்