மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தற்போது, மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 14 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் மாண்டஸ் புயலின் வெளிப்புறப்பகுதி 9.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி மையப்பகுதி 11.30 மணிக்கு கரையை கடக்கும் நிகழ்வு நடைபெறும்.. பின்புற வெளிப்பகுதி அதிகாலையில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரியா