மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கிவிட்டநிலையில், கடல் சீற்றம் மற்றும் காற்று காரணமாக மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை சேதம் அடைந்துள்ளது.
மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் அருகில் சென்று ரசிக்கும் வகையில் நடைபாதை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
அதற்காக ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்ட மரத்தாலான நடைபாதையை அமைத்துக் கொடுத்தது.
இதனை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி திறந்துவைத்தார்.
இந்த நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி சென்று வந்தனர். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
இந்தநிலையில், வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக மெரினா உள்பட பல கடற்கரையில் அலைகள் சீற்றத்துடன் எழும்பி வருகின்றன.
மேலும் பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்று(டிசம்பர் 8) இரவு முதலே சென்னையில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் மெரினாவில் போடப்பட்ட மரத்தாலான மரப்பாதை முற்றிலும் சேதமடைந்துள்ளது.
கலை.ரா
உலக பணக்காரர்கள்: இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட எலான் மஸ்க்