மாண்டஸ் புயல்: தேர்வுகள் ஒத்திவைப்பு!

Published On:

| By Kalai

மாண்டஸ் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் நாளை(டிசம்பர் 9) இரவு கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி புயல் முன்னெச்சரிக்கையாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் இன்று(டிசம்பர்  8) நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.  

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நாகை, அறந்தாங்கி, ஒரத்தநாடு, லால்குடி, பெரம்பலூர், வேப்பூர், இனாம்குளத்தூர், நன்னிலம் உள்ளிட்ட இடங்களில் கலை, அறிவியல் உறுப்புக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

கலை.ரா

விஜய் பாடல் பாட சிம்பு பெற்ற சம்பளம் என்ன தெரியுமா!

இமாச்சல் ரிசல்ட்: பாஜகவுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel