நெருங்கும் புயல்: சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

Published On:

| By Kalai

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, தூத்துக்குடி, கடப்பா, மும்பை போன்ற இடங்களுக்கு செல்லும்  7  விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், மேலும் 4  விமானங்கள் இன்று(டிசம்பர் 9) ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 2:50 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 6:50 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்,

அதைப்போல் இன்று மாலை 6:20 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 9:30 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்,

ஆகிய 4  விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் இதுவரையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று மாலையிலிருந்து  இரவு வரையில், மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம்.

குறிப்பாக இன்று மாலையிலிருந்து நள்ளிரவு வரை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில், காற்று மழை அதிக அளவில் இருக்கும் என்பதால், அந்த நேரங்களில் இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் மோசமான வானிலை நிலவும் அந்த நேரத்தில், சென்னையில் தரையிறங்க வரும் விமானங்களை, பெங்களூர், ஹைதராபாத்  விமான நிலையங்களில் தரையிறங்கச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செய்துள்ளனர்.

அதோடு அந்த விமான நிலையங்களுக்கு  தகவல் கொடுத்து, சென்னையில் இருந்து வரும் விமானங்கள் தரை இறங்குவதற்கு ஃபே எனப்படும் நடைமேடைகளை  தயாராக வைத்திருக்கும் படியும் தெரிவித்துள்ளனர்.

கலை.ரா

தீவிர புயலாக இருந்து மாண்டஸ் வலுவிழந்தது!

எங்கெல்லாம் பேருந்து இயங்காது: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel