மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை எந்தவொரு புயலும் தமிழகத்தில் கரையை கடக்காமல் இருந்தது.
இந்தச் சூழலில் தான் வங்கக் கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
இந்தப் புயல் இன்றிரவு 9.40 மணியளவில் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது.
இப்போது சென்னையில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்தில் இருந்து 90 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. புயல் இப்போது மணிக்கு சுமார் 10-15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இன்னும் சில மணி நேரத்தில் புயலின் மையப் பகுதியும் கரையைக் கடக்கும் நிலையில், தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் இப்போது பலத்த காற்று வீசி வருகிறது.
பல்வேறு பகுதிகளிலும் மணிக்கு சுமார் சுமார் 70 கிமீ வேகம் வரை காற்று வீசி வருகிறது. புயல் நெருங்க நெருங்கக் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மாண்டஸ் புயல் நெருங்கி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
குறிப்பாக மாமல்லபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
நகர் பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு சுமார் அதிகபட்சமாக 75-85 கிமீ வரை காற்று வீசக்கூடும்.
கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 13 புயல்கள் சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையைக் கடந்துள்ளது.
இப்போது 14ஆவது புயலாக மாண்டஸ் மாமல்லபுரம் அருகே சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையைக் கடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கரையை கடக்க தொடங்கியது மாண்டஸ் புயல்!
150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கம்: எலான் மஸ்க்