புயல் எச்சரிக்கை: 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!

தமிழகம்

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து இன்று(டிசம்பர் 8) மதியம் முதலே வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்தநிலையில் தமிழகத்தில் மேலும் 9 மாவட்டங்களுக்கு நாளை(டிசம்பர் 9) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

கலை.ரா

சென்னையில் 6 விமானம் ரத்து: 10 விமானம் தாமதம்!

நடிகையின் காலை வருடிய பிரபல இயக்குநர்: வீடியோ வைரல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *