புயல் எச்சரிக்கை காரணமாக வேலூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (டிசம்பர் 7) புயலாக வலுப்பெற்றது.
இன்று (டிசம்பர் 8) காலை முதல் புயலின் வேகம் குறைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (டிசம்பர் 9) நள்ளிரவு ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று காலையிலிருந்தே கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும் போது வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.
மோனிஷா
நகரும் மாண்டஸ்: சீற்றத்துடன் காணப்படும் கடல்!