மாண்டஸ் புயல்: களையிழந்த காசிமேடு மீன்சந்தை!

Published On:

| By Selvam

மாண்டஸ் புயல் தாக்கத்தினால் காசிமேடு மீன் சந்தையில் இன்று (டிசம்பர் 11) மீன் விலை குறைந்துள்ளது.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

மாண்டஸ் புயல் தாக்கத்தினால், கடந்த வாரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகளில் ஏற்கனவே பிடித்து வைக்கப்பட்டிருந்த மீன்கள் இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பனை செய்யப்பட்டன.

ஒரு சிலர் மட்டுமே கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி சென்றனர்.

வார இறுதி நாட்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் வஞ்சுரம், சுறா, இறால், கடம்பா, நெத்திலி, பாறை, வவ்வால் போன்ற மீன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பெருமளவு வராததால், மீன்கள் விற்பனை நடைபெறவில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 150 விசைப்படகுகள் சேதமடைந்ததால், ஒரு சில விசைப்படகுகள் மட்டுமே வானிலை அறிவிப்பிற்கு பிறகு கடலுக்கு செல்ல ஆயத்தமாக உள்ளன.

செல்வம்

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel