தீவிர புயலாக இருந்த மாண்டஸ் வலுவிழந்தது!

தமிழகம்

தீவிர புயலாக வலுப்பெற்று இருந்த மாண்டஸ் தற்போது தீவிர புயலாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 9) காலை தீவிர புயலாக வலுப்பெற்றது.

தொடர்ந்து காரைக்காலுக்கு வடகிழக்கே 200 கிலோ மீட்டர் வேகத்திலும் சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

மேலும் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.

தற்போது மாண்டஸ் தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. மேலும் காரைக்காலுக்கு வடகிழக்கே 180 கி.மீ வேகத்திலும் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 260 கி.மீ வேகத்திலும் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து மாண்டஸ் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மாண்டஸ் இன்று (டிசம்பர் 9) இரவு 11 மணிக்கு மேல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மாமல்லபுரத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

புயல் கரையை நெருங்கும் போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் புயல் கரையைக் கடக்கும் போது 80 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோனிஷா

ஓபிஎஸ்க்கு தடை கேட்ட இபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *