மணப்பாறையில் விறுவிறுப்பாக துவங்கிய ஜல்லிக்கட்டு

தமிழகம்

மணப்பாறை அருகே மஞ்சம்பட்டில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஞ்சம்பட்டியில் அந்தோனியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ் மற்றும் மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

8 சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் ஒரு சுற்றுக்கு 22 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாடுகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு கட்டில், சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செல்வம்

சென்னையில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி!

ஜார்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0