2023ன் சிறந்த மனிதர்: விருது பெற்ற மு.க.ஸ்டாலின்

Published On:

| By Kavi

M K Stalin got award

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஆசிய செஸ் கூட்டமைப்பு சிறந்த மனிதருக்கான விருது வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் 114 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று இன்றுடன்(ஜூலை 28) ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ஆசிய மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி, இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் சதுரங்கப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக விளங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 1.03.2023 அன்று நடைபெற்ற Asian Chess Excellence Awards விருது வழங்கும் நிகழ்ச்சியில், 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருது (Man of the Year Award) வழங்கப்பட்டது.

இந்த விருதினை ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பரத் சிங் சௌகான் அன்றைய தினம் பெற்றுக் கொண்டார். அந்த விருதினை இன்று முதல்வரிடம் வழங்கினார”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

அண்ணாமலை நடைபயணத்தை துவக்கி வைத்தார் அமித்ஷா

திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? – அமித்ஷா கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel